சித்தர் என்னும் ஓர்
அதிசய நிலை
சித்தரெனும் வார்த்தை உங்களுக்கு அதிசயமாக உள்ளதா? ஆம் என உங்கள் பதிலிருந்தாலும் காரணம் கேட்டால் அப்படி ஒருவரே இல்லை என்பீர்கள். இல்லை தெரியும் என்றாலும் அவர்கள் முன்னய காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பீர்கள். உங்களி எத்தனை பேருக்கு இன்றும் சித்தர்கள் இருக்கிரார்கள் என்ற உண்மை தெரியும்?
"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர்
என்று பொருள். அதாவது சித் என்பது அறிவைக் குறிக்கிறது. ஆகவே அறிவு ஞானம் கைவரப்பெற்றவர்கள் என பொருள்படுகிறது.
இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை,
தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை
பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகங்கள்
- நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
- ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
- பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
- பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
- தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
- தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
- சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
அட்டமாசித்து என்பதும் சித்தர் சம்பந்தமானதே. அவையாவன அணிமா, லகிமா, கரிமா, மகிமா, பிராமியம், பிராப்தி போன்றனவாகும்.
எண் பெருஞ் சித்திகளை விளக்கம்
- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.[3]










0 comments:
Post a Comment