உயிருள்ளவை
இந்தப் பாரிய உலகில் எண்ணிறந்த உயிரினங்கள் வாழ்கின்றன. அவை பல விதமான வடிவங்களையும், பல விதமான வாழ்க்கை முறைகளையும் மற்றும் பல வித்தியாசமான பழக்கவளக்கங்களையும் கொண்டு அமைந்துள்ளன.
சுவாசித்தல், இனப்பெருக்கம் செய்தல், கழிவகற்றல், உணர்தல் போன்ற பல காரணிகள் இடம்பெறுவதாலேயே நாம் பொருட்களை உயிருளவை, உயிரற்றவை என பிரிக்கிறோம்.இவற்றிற்கிடையிலான வித்தியாசங்கள் பற்பலவாகும்.
உயிருளவை உயிரற்றவை
- நகரும் நகராது
- சுவசிக்கும் சுவாசிக்காது
- கழிவகற்றும் கழிவகற்றாது
- உணரும் உணராது
- இனப்பெருக்கம் செய்யும் இனப்பெருக்கம் செய்யாத
- உணவு உண்ணும் உணவு உண்ணாத
இவ்வாறான வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் அவற்றிலும் சில விதிவிலக்காகவே உள்ளன.
Eg: மரங்கள்
வைரஸ்
உயிருள்ளவை பிரதானமாக 3 வகைப்படும்.
- தாவரம்
- விலங்கு
- நுண்ணங்கி
தாவரங்கள்
பயன்கள்
- நிழல் தரும்.
- விறகாகப் பயன்படும்
- பழம், காய்கறி போண்றவை உணவு சமைக்கவும், உண்ணவும் பயன்படுகிறது.
- பூ விசேட தினங்களில் அலங்கரிக்கவும், அன்பை வெளிக்காட்டவும், இறைவனை வணங்கவும் மேலும் பல விடயங்களிற்கும் உதவுகிறது.
- ஒவ்வொரு பாகங்களும் மருந்துக்கும், உணவிற்கும் பயன்படுகிறது.
- சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
- ஒட்சிசனை வெளியிடுவதன் மூலமும், காபண்டைஒக்சைடை உள்ளெடுப்பதன் மூலமும் சூழல் சமனிலையைப் பேண உதவுகிறது.
- புவி வெப்பமாவதைத் தடுக்கிறது.
- மண்ணரிப்பு ,வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்கள் ஏற்படாது பாதுகாக்க உதவுகிறது.
- உடலுக்கு சக்திஅளிக்கும் உனவுகளையும் தருகிறது.
- வீடு கட்ட மரமாகப் பயன்படுகிறது.
- தளபாட உற்பத்திக்கு பயன்படுகிறது.


.png)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





0 comments:
Post a Comment