மூளை
8:04 AM |
மூளை
நமது உடலில் உள்ள அத்தனை அங்கங்களையும் கட்டுப்படுத்தும் ஒரே உறுப்பு நரம்புத் தொகுதியாகும்.
அவ்வாறான சிறப்பு மிக்க நரம்புத் தொகுதியென்பது மூளையையும், முண்ணாணையும் உள்ளடக்கியது.
அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது தான் நரம்புத் தொகுதி.
அதில் நாம் யோசித்துச் செய்யும் செயற்பாடுகள் மூளையலும், நம்மை அறியாது செய்யும் செயற்பாடுகள் முண்ணாணாலும் கட்டுப் படுத்தப் படுகின்றன.
நமது உடலில் முக்கிய அம்சம் வகிப்பதுமூளையாகும். எத்தனையோ முக்கியமான பகுதிகள் நம் உடலில் காணப்பட்டாலும் எவ்வாறு வியாபாரமின்றி வர்த்தகம் இல்லையோ அது போல மூளை இன்றி அவை எதுகும் பிரயோசனமற்றது ஆகும்.
அதுமட்டுமன்றி நமது ஞாபக சக்தியும் இதிலேயே தங்கியுள்ளது.
எறும்புகள்
1:19 AM |
தினம் தினம் ஏளனமாக நம் காலில் சிக்குண்டு மடியும் ஓர் சிறிய தான் எறும்பு என்றே நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். அது செய்யும் அற்புதங்களும், அரிய செயற்பாடுகளும் இன்ரு யாருக்குத் தெரியும். அப்படித் தெரிந்தாலும் யாரால் தான் அப்படியான செயற்பாடுகளைச் செய்ய முடியும். கை விரலளவும் வராத எறும்புகள் பற்றி பார்ப்போம்.
இது இன்றை மனிதருணராத இனிமை இரகசியத்தை இவ்வுலகுக்குணர்த்தும் ஓர் அற்புதப் பூச்சியாகும். இது கூட்டமாக வாழும். அதேவேளையில் ஒவ்வொன்றும் சந்திக்கும் வேளையில் தகவல்களைப் பரிமாற்றும் தன்மை கொண்டது. எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப்
பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன.
இயல்புகள்
- இதற்கு 6 கால்கல் உண்டு.
- எங்கும் காணப்படுகிறது. (முக்கியமாக வெப்ப வலயத்தில்)
- இவை உலகில் தமது வாழ்வை வெற்றிகரமாக நடத்தி வரும் அதிக எண்ணிக்கை கொண்ட உயிரினமாகும். இதற்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
- பொதுவாக தென் பனிமுனைப் பகுதிகளிலேயே எறும்புகளைக் காணமுடியாது.
- இவை ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- இது ”Formicidae” எனும் குடும்ப வகையைச் சார்ந்தது.
- ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனம்பெருக்கும் திறன் கொண்ட அரசி என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில ‘சோம்பேறிகள்' என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' , ‘போராளிகள்' ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- இது உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும், துண்டங்களாலான உடலையும் கொண்டது. இவ்வியல்புகள் காரணமாக இவை ஆத்திரபோடா வகையைச் சேர்ந்தனவாக உள்ளன.
- அது மட்டுமன்றி இவை தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரண்டு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்னய பகுதியில் இரண்டு உணர்விழை அல்லது உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்குமாம்.
- கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவி புரிந்தாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே காணப்படும்.
- அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் முனைவாக்கம் (polarization) அறியகூடிய மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்புறத்தில் கொண்டிருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)

.jpg)





.jpg)
.jpg)
.gif)
.jpg)






