Powered by Blogger.
RSS

விண்வெளி

விண்வெளி

                                   ”வானை அளப்போம், கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்.” என கவிபாடி அன்றே விண்வெளிப் பயணத்திற்கு வித்திட்டான் பாரதி எனும் கவிஞன். ஆம் அவன் அன்று கண்ட கனவு இன்று நனவாகிக் கொண்டு தான் இருக்கிறது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மனிதன் கைத்தொழிற் புரட்சியின் பின் எடுத்த முயற்சிகள் ஏராளம். அவற்றிலும் அவன் விண்வெளி ஆராய்ச்சிக்கு எடுத்த முயற்சிகள் எண்ணற்க என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் அவனால் இந்த அளவிற்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதீத வளர்ச்சியை அடைய முடிந்தது. 
”தெய்வத்தால் ஆகாதெனினும் மூயற்சி தன்
மெய் வருந்தக் கூலி தரும் ” 
என்னும் திருக்குறள் இன்று நனவாகி வருகிறது என்பதற்கு இவ்வெற்றியும் ஒரு எடுத்துக்காட்டு என்பதை மறுப்பதற்கில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment