Powered by Blogger.
RSS

temple flower

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

graphics

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

lotus in the pond

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

pair of roses

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

wallpaper

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூளை

 மூளை

நமது உடலில் உள்ள அத்தனை அங்கங்களையும் கட்டுப்படுத்தும் ஒரே உறுப்பு நரம்புத் தொகுதியாகும். 

அவ்வாறான சிறப்பு மிக்க நரம்புத் தொகுதியென்பது மூளையையும், முண்ணாணையும் உள்ளடக்கியது.  
 
 
அதாவது நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது தான் நரம்புத் தொகுதி. 

அதில் நாம் யோசித்துச் செய்யும் செயற்பாடுகள் மூளையலும்,  நம்மை அறியாது செய்யும் செயற்பாடுகள் முண்ணாணாலும் கட்டுப் படுத்தப் படுகின்றன.


 நமது உடலில் முக்கிய அம்சம் வகிப்பதுமூளையாகும். எத்தனையோ முக்கியமான பகுதிகள் நம் உடலில் காணப்பட்டாலும் எவ்வாறு வியாபாரமின்றி வர்த்தகம் இல்லையோ அது போல மூளை இன்றி அவை எதுகும் பிரயோசனமற்றது ஆகும்.

அதுமட்டுமன்றி நமது ஞாபக சக்தியும் இதிலேயே தங்கியுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எறும்புகள்






எறும்புகள்

                            தினம் தினம் ஏளனமாக நம் காலில் சிக்குண்டு மடியும் ஓர் சிறிய தான் எறும்பு என்றே நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். அது செய்யும் அற்புதங்களும், அரிய செயற்பாடுகளும் இன்ரு யாருக்குத் தெரியும். அப்படித் தெரிந்தாலும் யாரால் தான் அப்படியான செயற்பாடுகளைச் செய்ய முடியும். கை விரலளவும் வராத எறும்புகள் பற்றி பார்ப்போம்.

                                                                       இது இன்றை மனிதருணராத இனிமை இரகசியத்தை இவ்வுலகுக்குணர்த்தும் ஓர் அற்புதப் பூச்சியாகும். இது கூட்டமாக வாழும். அதேவேளையில் ஒவ்வொன்றும் சந்திக்கும் வேளையில் தகவல்களைப் பரிமாற்றும் தன்மை கொண்டது. எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன.

இயல்புகள்
  • இதற்கு 6 கால்கல் உண்டு.
  • எங்கும் காணப்படுகிறது.  (முக்கியமாக வெப்ப வலயத்தில்)
  • இவை உலகில் தமது வாழ்வை வெற்றிகரமாக நடத்தி வரும் அதிக எண்ணிக்கை கொண்ட உயிரினமாகும்.                            இதற்கு      கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின்
    வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
  • பொதுவாக தென் பனிமுனைப் பகுதிகளிலேயே எறும்புகளைக் காணமுடியாது.
  • இவை ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இது ”Formicidae” எனும் குடும்ப வகையைச் சார்ந்தது.
  • ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனம்பெருக்கும் திறன் கொண்ட அரசி என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில ‘சோம்பேறிகள்' என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' , ‘போராளிகள்' ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இது உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும், துண்டங்களாலான உடலையும் கொண்டது. இவ்வியல்புகள் காரணமாக இவை ஆத்திரபோடா வகையைச் சேர்ந்தனவாக உள்ளன.
  • அது மட்டுமன்றி இவை தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரண்டு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்னய பகுதியில் இரண்டு உணர்விழை அல்லது  உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்குமாம்.
  • கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவி புரிந்தாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே காணப்படும்.
  • அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் முனைவாக்கம் (polarization) அறியகூடிய மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்புறத்தில் கொண்டிருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சித்தர் என்னும் ஓர் அதிசய நிலை

சித்தர் என்னும் ஓர்
அதிசய நிலை

                                                                       சித்தரெனும் வார்த்தை உங்களுக்கு அதிசயமாக உள்ளதா? ஆம் என உங்கள் பதிலிருந்தாலும் காரணம் கேட்டால் அப்படி ஒருவரே இல்லை என்பீர்கள். இல்லை தெரியும் என்றாலும் அவர்கள் முன்னய காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பீர்கள். உங்களி எத்தனை பேருக்கு இன்றும் சித்தர்கள் இருக்கிரார்கள் என்ற உண்மை தெரியும்? 

                                                       ஆம் இன்றும் சித்தர்கள் எம் கண்ணில் படாதவாறோ பட்டும் தெரியாதவாரோ இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

                                                                      "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சித் என்பது அறிவைக் குறிக்கிறது. ஆகவே அறிவு ஞானம் கைவரப்பெற்றவர்கள் என பொருள்படுகிறது.

                                                     இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்

எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகங்கள்

  • இயமம் -  கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள்                  விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
  • நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
  • ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
  • பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
  • பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
  • தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
  • தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
  • சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.


அட்டமாசித்து என்பதும் சித்தர் சம்பந்தமானதே. அவையாவன அணிமா, லகிமா, கரிமா, மகிமா, பிராமியம், பிராப்தி போன்றனவாகும்.

எண் பெருஞ் சித்திகளை விளக்கம்

  • அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  • மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
  • இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  • கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  • பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  • பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  • ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  • வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.[3]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


மக்கள் சேவையே
மகேசன் சேவை 


இந்த தளம் மக்களது நலனை அடிப்படையாக கொண்டது என்பது தான் உண்மை.ஏனெனில் இந்த நவீன உலகத்திலும் படிப்பறிவில்லாத, உலகம்த்ரியாத, நவீனம் தெரியாத எத்தனைய மனிதர்கள் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அது மட்டுமன்றி புதிய தகவல்கள் அறிய ஆர்வம் இருந்தும் வழியின்றித் தவிக்கிறார்கள்.
                                அவர்கள் அர்வம் தணிக்கவும் மக்களுக்கு அரிய பல உண்மைகளை சொல்லவும் இத் தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.
                           இதனால் நீங்களும் பயன் பெருவீர்கள் என நம்புகிறேன்.
  
Make the use of this and 
become a greatest person in the world 

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பல புதிய தகவல்களுடன் நானும் நீங்களும்

welcome to my site 

and open your eyes


                      இந்த படத்தைப் பாருங்கள். நம்ப முடுயவில்லை அல்லவா? ஆனால் இவ்வாறெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும். கவலை வேண்டாம். இனி வரும் காலத்தில் இவை எல்லாம் நடக்கத் தான் போகிறது.

   இன்றே நம்பமுடியாத எத்தைனையோ விடயங்கள் நம் முன்னே தோன்றி தோன்றி மறைகிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நம்பித் தான் ஆக வேண்டும். இன்று ஒவ்வொரு துறையும் கண்டுள்ள வளர்ச்சியே இவை யாவற்றிற்கும் காரணமாக அமைந்துள்ளது. இனி நடப்பவற்றிற்கும் அவையே காரணமாக அமையும் என நம்புகிறேன். 

                          அத்தோடு இவை எல்லாம் எந்த யுகத்திலோ என்று அலுட்டிகொள்ளாதீர்கள். இவை யாவும் இந்த யுகத்திலே, அதிலும் இன்னும் சிலவருடங்களில் நடக்கப்போகிறது. எம்மால் இயலாவிட்டாலும் இளைய சந்ததியினரால் கண்டிப்பாக இவை யாவற்றையும் பார்க்கவும் உணரவும் முடியும். 
                        இதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் உண்மை.  யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாதஉண்மை.

                  ஆனாலும் இவ் அதிசயங்கள் இப் பூமியை சுவர்க்கமாக்குமா? இல்லை நரகமாக்குமா?
                     பதில் எங்கல் கையிலே. 
இயற்கை இருந்தால் அது சுவர்க்கம். இல்லையே சொல்ல வேண்டியதில்லை.
   
The choice is yours. So try to select best.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS